26-01-2012 அன்று நடந்த விஜய் டிவி-ன் நீயா? நானா? நிகழ்ச்சியில் எடுத்து கொண்ட விவாதம் இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று "பணமா ? கொள்கையா?"
ஆனால் விவாதத்தில் பங்கு பெற்ற இரண்டு தரப்பினரும் தங்களுடைய கருத்தை சரியாக முன் வைக்கவில்லை என்றே கருத முடிகிறது .
"கொள்கையே" என்று வாதம் செய்தவர்களை கவனித்தால்
- அவர்களிடம் சமுதாய அக்கறை இருப்பதாக தெரியவில்லை, ஆனால் அவர்களிடம் ஒரு வகையான அச்ச உணர்வு , தன்னம்பிக்கை இழந்த , முயற்சி எடுக்க முனையாதவர்களாகவே தோன்றினர் (நல்ல ஆசிரியர் ஆகவும் , இஸ்ரோ - வில் பணியாற்ற விரும்பியவரையும் தவிர ) .
- இந்த so-called கொள்கைவாதிகள் , சமுதாயதிற்கு என்ன கற்று தர முனைகிறார்கள் என்பதை எவரும் முன் வைக்கவில்லை. அவர்களின் விவாதம் நல்வழியில் பணம் சம்பாதிப்பவர்களை கூட ஏற்றுகொள்ள அவர்கள் கொள்கை தடையாகவே இருந்தது. காரணம், எதிரணியில் இருந்தவர்கள் அனைவரும் தங்களது கல்வி தகுதியினாலும் , முயற்சியினாலும் முன்னேறவேண்டும் என்று விரும்புகின்ற சராசரி நடுத்தர வர்க்கத்தை சார்ந்த இந்திய இளைஞர்களே ஆவர்.
No comments:
Post a Comment